சுடச்சுட

  

  கூடங்குளத்தில் இரண்டு வாரங்களில் மின் உற்பத்தி தொடங்கும்: ரத்தன் குமார் சின்ஹா

  By dn  |   Published on : 04th January 2013 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ratan

  கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மின் உற்பத்தி தொடங்கும் என அணு சக்தி துறை தலைவர் ரத்தன் குமார் சின்ஹா தெரிவித்தார்.

  கொல்கத்தாவில் வியாழக்கிழமை தொடங்கிய 100-ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

  கூடங்குளத்தில் 1000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அனைத்துக் கட்டப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.

  முதல் அணு உலையின் மூலம் கடந்த 2011 டிசம்பர் மாதமே மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டது. உள்ளூர் மக்களின் போராட்டம் காரணமாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் தடைபட்டன.

  மத்திய, மாநில நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பலவேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன.

  அணு உலைக் குழாய்களில் இறுதிக் கட்ட ஆய்வின் போது கண்டறியப்பட்ட கசிவுகள், ரஷிய மற்றும் இந்திய தொழில் நுட்ப வல்லுநர்களால் சீர் செய்யப்பட்டுவிட்டன.

  கடந்த செப்டம்பர் 19ம் தேதி முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கி அக்டோபர் 2ம் தேதி நிறைவு பெற்றது. எனவே அடுத்த கட்டமாக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கும் வேலைதான் பாக்கி உள்ளது.

  உலையின் உற்பத்தி திறன், பாதுகாப்பு ஆகியவை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி அளித்துவிட்டது. எனவே இன்னும் இரண்டு வாரங்களில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்றார் ரத்தன் குமார் சின்ஹா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai