சிவசேனை தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு

சிவசேனைக் கட்சித் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிவசேனை தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு

சிவசேனைக் கட்சித் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் சுபாஷ் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

சிவசேனைக் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், உத்தவ் தாக்கரே (52) கட்சி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மறைந்த பால்தாக்கரே 40 ஆண்டுகளாக வகித்து வந்த "பிரமுக்' என்ற பதவி இனி கட்சியில் இருக்காது. செயல் தலைவர் என்ற பதவியும் இருக்காது.

2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார் என்றார் சுபாஷ்.

உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், கட்சியில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. அவர் யுவ சேனா தலைவராகவே நீடிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com