சுடச்சுட

  

  சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு: குரியனுக்கு எதிரான மனு தள்ளுபடி

  By dn  |   Published on : 30th June 2013 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியனுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

  கடந்த 1996-ஆம் ஆண்டு கேரள மாநிலம் சூரியநெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒரே நபர் தர்மராஜன்.

  இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட பி.ஜே.குரியன் உள்ளிட்ட 35 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

  இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் பி.ஜே.குரியனுக்கும் தொடர்பு உண்டு என தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தர்மராஜன் கூறியிருந்தார். அதையடுத்து குரியனிடம் மறு விசாரணை செய்ய வேண்டும் என பொது நலன் வழக்குகள் பதியப்பட்டன.

  இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக குரியனிடம் மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணே மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய மனுவை பீருமேடு முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  இந்நிலையில் கடந்த மாதம் தொடுபுழா நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் பி.ஜே.குரியனுக்கு உள்ள தொடர்பு குறித்து தர்மராஜன் பிறழ்சாட்சியம் அளித்தார்.

  இதையடுத்து பி.ஜே.குரியனுக்கு எதிரான மனுவை நீதிபதி ஆப்ரகாம் மேத்யூ தள்ளுபடி செய்ததுடன் குரியனை இந்த வழக்கில் சேர்ப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என சனிக்கிழமை உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai