சுடச்சுட

  

  சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ்: அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

  By dn  |   Published on : 08th May 2013 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஆ. இளவரசன் வலியுறுத்தினார்.

  மாநிலங்களவையில் முக்கிய பிரச்னைகளை சிறப்புக் கவனத்திற்குக் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட போது, அவர் முன்வைத்த கோரிக்கை வருமாறு:

  தமிழக நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக தமிழை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

  இது குறித்து, மத்திய அரசை தமிழக முதல்வர் பல முறை வலியுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்ற விசாரணைகள், உத்தரவுகள், தீர்ப்புகளில் மாநில அலுவல் மொழியை பயன்படுத்துவது குறித்து எடுத்துரைக்கும் அலுவல் மொழிகள் சட்டம் 1963-இன் பிரிவு 7, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்து 348 (2) ஆகியவற்றை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழைப் பயன்படுத்தும் போது வழக்கு விசாரணைகள் மற்றும் விவரங்களை சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளமுடியும் என்று இளவரசன் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai