இளஞ்சிவப்பு நிறத்தில் "நோட்டா' பொத்தான்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் "நோட்டா' பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டும் "நோட்டா' பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆனால், மக்களவைத் தேர்தலில் இந்த பொத்தான் வெண்ணிறத்தில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் "நோட்டா' பொத்தானை அழுத்தி, அதனைப் பதிவு செய்யலாம். இதை முதல் முறையாக ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளது.

"நோட்டா' பொத்தான் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசியாக "நோட்டா' பொத்தான் இடம் பெற்றுள்ளது.

"நோட்டா' என்றே இடது ஓரம் ஆங்கிலத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், பொத்தான் மீது பிராந்திய மொழிகளில் நோட்டா என்று பெயர் பொறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு வெள்ளை நிறத்தில் வழங்கப்படுவதால் "நோட்டா' பொத்தானும் வெண்ணிறத்தில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com