சுடச்சுட

    

    மூன்றாவது அணி அமைப்பது குறித்து, சமாஜவாதி, மார்க்சிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ் ஆகியோர் பேசுகையில், " நாட்டை வகுப்புவாத சக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதற்கு மூன்றாவது அணி தேவைப்படுகிறது' என்றனர். "பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மூன்றாவது அணி தலைமையிலான அரசு உருவாகும்' என சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai