சுடச்சுட

    

    ராஜஸ்தான் மாநிலத்தில் கோயில் பூசாரி, மேலாளர், உதவியாளர் பணியிடங்களில் 30 சதவீத இடஒதுக்கீட்டில் பெண்களை நியமிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    மொத்தமுள்ள 65 காலியிடங்களில், 7 மேலாளர், 47 பூசாரிகள், 11 உதவியாளர் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வை உதய்பூர் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

    இதுகுறித்து தேவஸ்தானத்துறை ஆணையர் பவானி சிங் கூறுகையில், "இதற்கு முன் இந்தத்துறையில் பெண்களுக்கு ஒதுக்கீடு இல்லை தற்போது இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கோயில் மற்றும் தேவஸ்தானத்துறை பணியிடங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரப்பப்படுகின்றன' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai