டிஸா அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதாக மாநில அரசு அறிவித்த விதம் மிகவும் தவறானது. இதுபோன்ற முக்கிய அறிவிப்பை சட்டப் பேரவையில்தான் அறிவிக்க வேண்டும். இதைவிடுத்து வெளியே அறிவித்தது பேரவையை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸýம் பாஜகவும் குற்றம்சாட்டியுள்ளன.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 60ஆக உயர்த்துவதாக ஒடிஸா அரசு புதன்கிழமை அறிவித்தது. ""இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை சட்டப்பேரவைக்கு வெளியே அறிவித்து அவையை மாநில அரசு அவமதித்துள்ளது. பேரவைக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போது இதுபோன்ற கொள்கை முடிவுகளை அவையில் அறிவிப்பதுதான் நடைமுறையாகும்'' என்று பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நரசிங்க மிஸ்ரா (காங்கிரஸ்) தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவைக்கு வெளியே அறிவிப்பை வெளியிட்டு அவையை மாநில அரசு அவமதித்திருக்கிறது என்று பாஜகவும் புகார் தெரிவித்துள்ளது. ""இதுபோன்ற மிகவும் பிரபலமான அறிவிப்பை சட்டப் பேரவையில்தான் வெளியிட்டிருக்க வேண்டும்'' என்று அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஜ்ஜன் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
""அப்படி ஓய்வு வயதை உயர்த்தும்போது அரசுப் பணிகளில் இளைஞர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று அவர் கேட்டுக் கொண்டார்.