குழந்தை இல்லாததால் விஷம் அருந்தி கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பெங்களூரு ஜெகஜீவன்ராம்நகர் விநாயகநகரைச் சேர்ந்தவர் சீனிவாஸ் (32). இவரது மனைவி துளசி (28). எலக்ட்ரிஷியன் பணி செய்து வந்த சீனிவாஸிற்கும், துளசிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பிறகு நீண்ட நாள் ஆகியும் குழந்தை பிறக்காததால் மனம் வருந்திய தம்பதியர், புதன்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்த போலீஸார், இருவரின் சடலங்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுமதித்தனர். இது குறித்து ஜே.ஜே.நகர் போலீஸôர் விசாரணை செய்து வருகின்றனர்