மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக துவாரகை பீட சங்கராசாரியார் சொரூபானந்த சரஸ்வதி மீது ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தப் புகார் தொடர்பாக சட்ட ஆலோசனைகளை கேட்டுள்ளோம். இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை' என்றார். மகாராஷ்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகளும் இதே காரணத்திற்காக சொரூபானந்த சரஸ்வதி மீது ஏற்கெனவே போலீஸில் புகார் அளித்துள்ளனர்.