பொதுத்துறையைச் சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக பங்கு விலக்கல் துறை இணைச் செயலர் சங்கீதா செளரி தெரிவித்தார்.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியத் தொழில் நிறுவனங்கள் சம்மேளன மாநாட்டில் அவர் மேலும் கூறியதாவது:
அரசுக்குச் சொந்தமான 8 முதல் 9 நிறுவனங்களின் பங்குகளை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக, ஏற்கெனவே 10 சதவீதப் பங்குகள் விற்கப்பட்டுள்ள சுரங்கம், உருக்கு, மின்னுற்பத்தி ஆகிய துறைகளைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 25 சதவீத அளவுக்கு விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவை தவிர வேறு சில நிறுவனங்களின் பங்குகளும் விற்கப்பட உள்ளன என்று சங்கீதா செளரி கூறினார்.