சத்தீஸ்கரில் தம்பதி உள்பட 4 மாவோயிஸ்டுகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கரில் உள்ள படேல்பரா கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணியில் உள்ளூர் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளான சஞ்சீவ் ஹிமாச்சி, அவரது மனைவி நவோதின் ஹிமாச்சி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சஞ்சீவ் ஹிமாச்சி, நவோதின் ஆகியோர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு முறையே ரூ. 8 லட்சம், ரூ. 3 லட்சம் சன்மானம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்றார்.
மேலும், நாராயண்பூர் பகுதியில் பதுங்கியிருந்து தப்பிச் செல்ல முயன்ற மாவோயிஸ்டுகளான ஜெய்ராம், ஜெய்சிங் ஆகியோரும் சிஆர்பிஎஃப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.