திருமலை ஏழுமலையான் கோயிலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊஞ்சல் மண்டபம், இம்மாதம் 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள மாடவீதியில், அக்னி மூலை மிகக் குறுகலாக உள்ளது. அதனால், பிரம்மோத்ஸவத்தின் போது நடைபெறும் வாகன சேவை, ரதத்தை திருப்புவது மிகவும் சிரமமாக இருந்தது. அதனால், அக்னி மூலையிலிருந்த ஊஞ்சல் மண்டபத்தை, அங்கிருந்து அகற்றி, கோயில் முன்புறம் 100 மீட்டர் உள்புறமாகத் தள்ளி தேவஸ்தானம் அமைத்தது.
அதற்காக, ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெற்ற, ஸஹஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம், வைபவோத்ஸவ மண்டபத்தில் நடத்தி வந்தது. தற்போது, ஊஞ்சல் மண்டபம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையொட்டி, வரும் 27-ஆம் தேதி, ஊஞ்சல் மண்டபம் திறக்கப்பட்டு ஸஹஸ்ர தீபாலங்கார சேவை நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.