அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு 10 மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல அஸ்ஸாம் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து அஸ்ஸாம் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அஸ்ஸாம் மாநிலத்தில் 10, 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்கள், 12 நாள்கள் கல்விச் சுற்றுலாவாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்கு அடுத்த மாதம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
நாசாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் கல்விச்சுற்றுலா கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் நவீனத் தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி முறைகள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.
மேலும், நாசா விஞ்ஞானிகளுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைக்கும்.
இந்தச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக, ஜான் கென்னடி விண்வெளி மையத்தையும் மாணவர்கள் பார்வையிடவுள்ளனர் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.