பிகார் மாநிலம், ஜபாஹா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி முதல்வரை அவரது ஓட்டுநருடன் காரில் மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திரா ரணா கூறியதாவது:
ஜபாஹா கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயண் பிரசாத். பள்ளி முதல்வரும் இயக்குநருமான இவர் முசாஃபர்பூரில் இருந்து சிதாமரிக்கு காரில் சென்ற போது மர்மக் கும்பல், அவரது காரை வழிமறித்து அவரை, அவரது ஓட்டுநருடன் காரில் கடத்திச் சென்றது. அந்த கார், ஜபாஹா கிராமத்தின் சாலையோரத்தில் விடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து பிரம்மபுரா காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் கூறினார்.