உ.பி.யில் 63%, ம.பி.யில் 54%

உத்தரப்பிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.52 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 54.41 சதவீத வாக்குகள் பதிவாகின.

உத்தரப்பிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.52 சதவீத வாக்குகள் பதிவாகின. இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 54.41 சதவீத வாக்குகள் பதிவாகின.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த 10ஆம் தேதி 10 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2ஆவது கட்டமாக 11 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் மேனகா காந்தி, சந்தோஷ் கங்க்வார், சலீம் ஹெர்வானி, பேகம் நூர்பானு ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

மத்தியப்பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கு, 2ஆவது கட்டமாக 10 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

தாமோ தொகுதிக்குள்பட்ட பூர் ஷாபூர், குவாலியர் தொகுதிக்குள்பட்ட நயாகாவ்ன், லஹார் தொகுதிக்குள்பட்ட கசாரியா, பிகாம்பூர் ஆகிய பகுதி மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வாக்கெடுப்பை புறக்கணித்தனர். மொராலி வாக்குச்சாவடியில் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலின்போது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு படையினரால் உடனடியாக நிலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ராஜ்கரில் வாக்குச்சாவடியில் ஏஜென்டுகளிடையே கைகலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினர்.

புத்ரமஞ்ச் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று கொண்டிருந்த பிரகலாத் என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மொரேனா தொகுதியில் போட்டியிட்ட 3 வேட்பாளர்கள் தேர்தல் முடியும்வரை, காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com