மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்: தலைமை நீதிபதி சதாசிவம்

அரசு வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி வரை நீதித் துறையில் 18 ஆண்டுகள் ஆற்றிய பணி முழு மனநிறைவைத் தந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.
மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்: தலைமை நீதிபதி சதாசிவம்

அரசு வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி வரை நீதித் துறையில் 18 ஆண்டுகள் ஆற்றிய பணி முழு மனநிறைவைத் தந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 9 மாத காலம் பதவி வகித்த அவர், ஏப்ரல் 25-ஆம் தேதி ஓய்வுபெற்றார். இந் நிலையில், தில்லியில் தமிழ் ஊடகச் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். வளர்ந்தது கிராமச் சூழலில்தான். அரசுப் பள்ளியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றேன். 1973-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தேன். அரசு வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கி 1996-ஆம் ஆண்டு நீதிபதியானேன். அப்போதிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை 18 ஆண்டுகள் நான்கு மாதங்கள் பணியாற்றியுள்ளேன். இப் பணிக் காலம் முழு மனநிறைவைத் தந்துள்ளது. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றி வெளியேறும்போது நிச்சயமாக எனக்கு முழு திருப்தியை தந்தது.

தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகளை குறைக்க நடவடிக்கை எடுத்தேன்.

தேசிய அளவில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) கடந்த ஆண்டு இறுதியிலும் இந்த ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதியும் இரு முறை நடத்தப்பட்டன. இதன் மூலம் பல லட்சம் வழக்

குகளுக்கு தீர்வு காணப்பட்டன

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள்.

குற்றவாளிகளின் கருணை மனுக்களை பல ஆண்டுகள் கிடப்பில் போட்டதாலும், தகுந்த காரணங்கள் சொல்லாததாலும் குற்றவாளிகளின் மனநிலை பாதிப்பை கருத்தில் கொண்டு, அவர்களுக்கும் இந்திய அரசியல் சட்டத்தில் எல்லா உரிமைகளும் உள்ளது என்ற காரணத்தினால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இளம் தலைமுறை வழக்குரைஞர்களுக்கு நான் கூற விரும்புவது, தங்களைத் தேடி வருவோரின் வழக்குகளில் நன்கு வாதாடி, விரைவில் பலன் பெற்றுத் தர வேண்டும் என்பதே.

என்னுடைய நீதித் துறை அனுபவத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். சென்னையிலோ அல்லது எனது கிராமத்திலோ குடியிருப்பேன். முதலில் எனது விருப்பம் நான் பிறந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பதுதான் என்றார் பி. சதாசிவம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com