Enable Javscript for better performance
ரகசியப் போர்க் கப்பல் கடற்படையில் சேர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரகசியப் போர்க் கப்பல் கடற்படையில் சேர்ப்பு

    Published on : 24th August 2014 12:21 AM  |   அ+அ அ-   |    |  

    destroyer

    உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட, ரேடார் போன்ற சாதனங்களின் கண்காணிப்பில் சிக்காத, நீர்மூழ்கி எதிர்ப்பு ரகசியப் போர்க் கப்பலான "ஐஎன்எஸ் கமோர்ட்டா', விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

    விழாவில் அருண் ஜேட்லி பேசியதாவது:

    நாம் பாதுகாப்பில் தயார்நிலையில் இருப்பது, மண்டல அளவிலான அமைதிக்கு உத்தரவாதமாகும்.

    முன்பு இந்தியா, பாதுகாப்பு தொடர்பான சாதனங்களை வாங்குவதில் முன்னணியில் இருந்தது. தற்போது அவற்றின் முக்கிய உற்பத்தியாளராக மாறி இருக்கிறது.

    புவியியலைப் பொருத்தவரையில் இந்தியா மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. நமக்கு மிகப்பெரிய கடற்பரப்பு உள்ளது.

    சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் இந்தியாவை அண்டை நாடுகள் சீண்டிப் பார்த்துள்ளன. ஆகவே நாம் பாதுகாப்பு விஷயத்தில் எப்போதும் தயார்நிலையில் இருப்பது இந்த மண்டலத்தில் அமைதியை உருவாக்குவதற்கு உத்தரவாதம் அளிக்கும்.

    நாமே தயாரித்துள்ள இந்த ரகசியப் போர்க் கப்பல் நமது பலத்தை வெளிப்படுத்துவதுபோல் உள்ளது என்று ஜேட்லி பேசினார். கமோர்ட்டா போர்க்கப்பல் குறித்து கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:

    ""ரேடார் போன்ற கண்காணிப்புச் சாதனங்களில் கண்களில் சிக்காத இந்தப் போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும், ஹெலிகாப்டரையும் சுமந்து செல்லும்.

    இந்தப் போர்க்கப்பல் 110 மீட்டர் நீளத்துடனும், 14 மீட்டர் அகலத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கமோர்ட்டா போர்க்கப்பலை இந்திய கடற்படையைச் சேர்ந்த நிறுவனமான கடற்படை வடிவமைப்பு இயக்குநகரம் (டிஎன்டி) வடிவமைத்துள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp