சுடச்சுட

  
  digvijay_singh

  பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு திருமணமாகிவிட்டதா? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மீண்டும் கேள்வி எழுப்பிப்பியுள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

  சர்வதேச மகளிர் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, திக்விஜய் சிங் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  பெண்களுக்கு சிறிதளவு கூட மோடி மரியாதை கொடுக்கவில்லை. குஜராத் பேரவைத் தேர்தல் வேட்பு மனு படிவத்தில் மனைவியின் பெயர் குறிப்பிட வேண்டிய இடத்தில் மோடி எதையும் குறிப்பிடவில்லை.

  அவருக்கு திருமணமாகவில்லையா? அல்லது அவர் தனது மனைவியைப் பிரிந்துவிட்டாரா?

  ஏன் அவர் எதையும் தெரிவிக்கவில்லை? மோடியின் மனைவி என்று கூறி வரும் ஜசோதாபென் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

  தனது மனைவி என்று கூறி வரும் ஜசோதாபென்னை கவனிக்கத் தவறிய மோடியால் எப்படி நாட்டைக் கவனிக்க முடியும்?

  மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியதில் எந்தத் தவறுமில்லை என்று கூறினார் திக்விஜய் சிங்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai