Enable Javscript for better performance
மும்பை புறநகர் ரயில் விபத்து: ஒருவர் பலி, 9 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    மும்பையில் புறநகர் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.

    மும்பையில் கசாரா-சிஎஸ்டி ரயில் நிலையங்கள் இடையே இயங்கும் புறநகர் ரயில் தீத்வாலா மற்றும் ஆம்பிவிலி இடையே வியாழக்கிழமை மதியம் 2.30 மணிக்குத் தடம்புரண்டது. இந்த விபத்தில் ஒருவர் இறந்ததாகவும் ரயிலின் கார்டு உள்பட 9 பேர் படுகாயமடைந்ததாகவும் மத்திய ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புறநகர் ரயில் விபத்தில் இறந்தவரின் பெயர் தவால் மயூர் லோதா(25) என்று தெரிய வந்துள்ளது. காயமடைந்த 9 பேரில் 4 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 5 பேர் மும்பையின் கல்யாண் பகுதியில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இவ்விபத்து காரணமாக, கல்யாணுக்கும் தீத்வாலாவுக்கும் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai