Enable Javscript for better performance
அடுத்த வாரம் பெட்ரோல் விலை ரூ. 1 குறைகிறது?- Dinamani

சுடச்சுட

    
    petrol

    அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1-க்கும் மேல் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எனினும், டீசலின் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.

    "டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.61.44 என்னும் அளவிலிருந்து ரூ. 60.50-ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 118.09 டாலர்களிலிருந்து 115.73 டாலர்களாக குறைந்துள்ளது. இந்த இரு காரணங்களால் பெட்ரோலின் விலை குறைக்கப்பட உள்ளது' என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    டீசலின் விலையை மாதந்தோறும் உயர்த்துவதை நிறுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் டீசலின் விலையை லிட்டருக்கு 50 பைசா உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai