Enable Javscript for better performance
இந்திய மருத்துவக் கவுன்சில் முறைகேடு: மேலும் ஒரு மருத்துவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    இந்திய மருத்துவக் கவுன்சில் முறைகேடு: மேலும் ஒரு மருத்துவர் கைது

    By dn  |   Published on : 27th March 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) சான்று பெறுவதில் முறைகேடு செய்ததாக குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த மேலும் ஒரு மருத்துவரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளதாவது:

    சீனா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் பயிற்சி பெறுவதற்காக சட்டத்துக்குப் புறம்பாக இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளதாக புகார் வந்தது.

    அதன்பேரில், இதுவரை 10 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவக் கவுன்சிலின் பெண் ஊழியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai