Enable Javscript for better performance
இயற்கை எரிவாயு விலை விவகாரம்: கேஜரிவால் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    இயற்கை எரிவாயு விலை விவகாரம்: கேஜரிவால் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

    By dn  |   Published on : 27th March 2014 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்தும்படி மத்திய அரசுக்கு குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கடிதம் எழுதியதாக ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக மேலிடம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்தும்படி மத்திய அரசுக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியிருப்பதாக தவறான தகவல்களை கேஜரிவால் மீண்டும் வெளியிட்டுள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அதுபோன்ற கடிதம் எதையும் மத்திய அரசுக்கு எழுதவில்லை. இயற்கை எரிவாயுவை அதிகளவில் உபயோகிக்கும் மாநிலங்களில் ஒன்றாக திகழும் குஜராத் மாநிலம், குறைவான விலைக்கு எரிவாயுவை தரும்படி மத்திய அரசிடம் திரும்பவும் வலியுறுத்தியுள்ளது என்று பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் செவ்வாய்க்கிழமை பேசிய கேஜரிவால், கிருஷ்ணா- கோதாவரி ஆற்றுப்படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்தும்படி மத்திய அரசுக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai