Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்களுக்கு தடை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பதியில் உள்ள, தேசிய வனவிலங்கு பூங்காவில், காதலர்கள் தொல்லையால் பூங்கா நிர்வாகம், இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதித்துள்ளது என, அதன் நிர்வாக அலுவலர் தெரிவித்தார். திருப்பதி அலிபிரி மலையடிவாரத்திலிருந்து, 3 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. இது, இந்தியாவின் இரண்டாவது பெரிய வனவிலங்கு பூங்கா. இதை சுற்றிப் பார்க்க, இரு சக்கர வாகனங்களுக்கும், நான்கு சக்கர வாகனங்களுக்கும் அனுமதியளிக்கப்படும்.

    இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதியளிப்பதால், இங்கே வரும் காதலர்கள் வண்டியை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, பார்வையாளர்கள் இளைப்பாற அமைத்திருக்கும் இடங்களில், இவர்கள் அமர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். இதனால், பூங்காவிற்குள், இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பதியில் வசிக்கும் உள்ளூர்வாசிகள், இனி வனவிலங்கு பூங்காவுக்கு செல்வது குறைந்து விடும் என, மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai