Enable Javscript for better performance
\\\"ஏ.கே.49\\\': மோடிக்கு கேஜரிவால் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    
    kejerwal

    "ஏ.கே.49' என்று தன்னை நரேந்திர மோடி அழைத்ததற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வாராணசி தொகுதியில் உள்ள கர்தானா கிராமத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    "பிரச்னைகளைப் பற்றி அவர் (நரேந்திர மோடி) பேசவேண்டும். அதைவிடுத்து, அவதூறாகப் பேசுவது பிரதமர் பதவி வேட்பாளருக்கான அழகல்ல.

    சமையல் எரிவாயு விலையேற்றம், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டது குறித்து மோடி பேச மறுப்பது ஏன்?

    ஊழல் புகார்களில் தொடர்புடைவர்களுக்கும், முசாபர்நகர் கலவரத்தில் தொடர்புடையவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது ஏன்? ' என்று அரவிந்த் கேஜரிவால் கேள்விகளை எழுப்பினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai