Enable Javscript for better performance
காங்கிரஸூக்கு எதிராக பாஜக, மஜத உள்ஒப்பந்தம்- Dinamani

சுடச்சுட

    
    siddharamiyah

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு எதிராக பாஜக, மஜத உள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்று முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.

    பெங்களூரு வடக்கு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து, தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியது:

    கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடிக்க பாஜக, மஜத கட்சிகள் உள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

    இதனால், மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களை வேட்பாளர்களாக்கி, பாஜகவுக்கு மஜத உதவி வருகிறது.

    மஜத கட்சியில் எந்தவிதமான சித்தாந்தமும் இல்லை. அந்தக் கட்சி சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகிறது.

    மதவாதக் கட்சியான பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் கவலை இல்லை, ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என்பதில் முன்னாள் பிரதமர் தேவ கெüடா குறியாக உள்ளார்.

    கர்நாடகத்தில் மோடியின் அலை எடுபடாது. மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் 20 இடங்களைக் கைப்பற்றும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai