Enable Javscript for better performance
\\\"கேஜரிவால் மீது இங்க் ஊற்றியது பாஜக தொண்டர்கள்தான்\\\'- Dinamani

சுடச்சுட

    
    dig_vijay_singh

    வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் மீது இங்க் ஊற்றியவர்கள் பாஜகவினர்தான் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறினார்.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜரிவால் மீது சிலர் இங்க் வீசினர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கண்டித்துள்ளார். ""கேஜரிவால் மீது இங்க் வீசப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாசிச மனப்போக்குடைய பாஜகவினர் தான் அதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள்'' என்று "டுவிட்டர்' இணையதளத்தில் புதன்கிழமை திக் விஜய் சிங் பதிவு செய்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai