Enable Javscript for better performance
\\\"சீட்\\\' கிடைக்காதவர்கள் கலங்க வேண்டாம்- Dinamani

சுடச்சுட

    
    ranjnath

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் கலங்க வேண்டாம்; பாஜக ஆட்சி அமைத்தப் பின் அவர்களுக்கு உரிய வகையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் ராஜநாத் சிங் கூறியுள்ளார்.

    இது குறித்து லக்னெüவில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:

    எந்த கட்சியும் பிரபலம் அடையும்போது அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பு. அவர்களில் ஒருசிலருக்குத்தான் வாய்ப்பு தர முடியும். வாய்ப்புக் கிடைக்காதவர்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமில்லை. மனம் கலங்க வேண்டாம். மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டு நரேந்திர மோடி பிரதமராக வருவாரேயானால், இந்த வாதங்கள் இருக்காது. தேர்தலில் "சீட்' கிடைக்காதவர்களுக்கு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai