Enable Javscript for better performance
தேர்தல் ஆணையத்திடம் சரத்பவார் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    
    sharad_pawar

    தேர்தலில் 2 முறை வாக்களிக்குமாறு பேசிய விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத் பவார் புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

    மும்பையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் பேசுகையில், "எதிர்க்கட்சிகள் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் சில விளக்கங்களை கேட்டு சரத்பவாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு சரத்பவார் தனது பதிலை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி விட்டார்.

    அதன்மீது சரியான முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கும் என நம்புகிறோம்' என்றார்.

    நவி மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமை தூக்கும் தொழிலாளர்களிடையே பேசிய சரத் பவார், மகாராஷ்டிரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பலகட்ட தேர்தலை பயன்படுத்தி 2 முறை வாக்குகளை பதிவு செய்யும்படி தெரிவித்திருந்தார்.

    தேர்தலில் வாக்களித்தற்கு அடையாளமாக கை விரலில் வைக்கப்படும் மையை அழித்துவிட்டு, 2வது முறை வாக்களிக்கும்படி அவர் கூறியி

    ருந்தார்.

    அவரது பேச்சு குறித்து பல்வேறு கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. பிறகு, தான் அவ்வாறு பேசியது நகைச்சுவைக்காகவே என்று பவார் கூறியிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai