Enable Javscript for better performance
தேர்தல் ஏற்பாடு: நக்ஸல் பகுதிகளில் தேடுதல் வேட்டை- Dinamani

சுடச்சுட

    

    தேர்தலை சுமுகமாக நடத்தும் நோக்கில், மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் தேடுதல் வேட்டையை ஒடிஸா போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    தேர்தலை சீர்குலைக்க மாவோயிஸ்ட்டுகள் முயலக்கூடும் என்பதால் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம் என்று மாநில காவல்துறை தலைமை இயக்குநர் பிரகாஷ் மிஸ்ரா புதன்கிழமை கூறினார். மாநிலத்தின் தெற்குப் பகுதியில் இருக்கும் 6 மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு நிலையை ஆய்வு செய்வதற்காக பிரகாஷ் மிஸ்ரா தலைமையில் கோரபுட்டில் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai