Enable Javscript for better performance
தொகுதிப் பக்கம் வந்தாரா சச்சின் பைலட்? வசுந்தரா ராஜே கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    தொகுதிப் பக்கம் வந்தாரா சச்சின் பைலட்? வசுந்தரா ராஜே கேள்வி

    By dn  |   Published on : 27th March 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ""அஜ்மீர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சதவீத காலம் கூட தனது தொகுதி மக்களுக்காக செலவிடவில்லை'' என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே குற்றம் சாட்டியுள்ளார்.

    அஜ்மீர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சன்வார் லால் ஜேட்டை ஆதரித்து புதன்கிழமை அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வசுந்தரா ராஜே, தற்போதைய காங்கிரஸ் எம்.பி சச்சின் பைலட் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    ""அஜ்மீர் தொகுதியில் சில இடங்களில் அடிக்கல் நாட்டப்பட்ட அளவிலேயே திட்டங்களின் நிலை உள்ளது. ஆட்சிக்கு வந்த 2 மாதங்களில் மக்களுக்கு பாஜக என்ன செய்துவிட்டது என்று சச்சின் பைலட் கேட்கிறார். இத்தனைக் காலம் அவர் எங்கே இருந்தார்? தொகுதிப் பக்கம் ஏன் வரவில்லை? அவர் பதில் சொல்ல வேண்டும்'' என்று வசுந்தரா ராஜே கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai