Enable Javscript for better performance
நக்ஸல் சதி முறியடிக்கப்படும்: ஜார்க்கண்ட் முதல்வர் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    நக்ஸல் சதி முறியடிக்கப்படும்: ஜார்க்கண்ட் முதல்வர் உறுதி

    By dn  |   Published on : 27th March 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலுக்கு இடையூறு செய்யும் விதமாக நக்ஸலைட்டுகள் நாசவேலைகளில் ஈடுபட்டால் அவர்களை ஒடுக்குவதற்குத் தயாராக இருப்பதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதா? என புதன்கிழமை செய்தியாளர்கள் கேட்டபோது அவர் அளித்த பதில்: வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களில் அதைச் சீர்குலைக்கும் விதமாக தீவிரவாத சக்திகள் நாசவேலைகளில் ஈடுபடக் கூடும். அவற்றை முறியடிப்பதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேர்மையாகவும், நியாயமான முறையிலும் தேர்தல் நடைபெறும் என்று ஹேமந்த் சோரன் கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai