Enable Javscript for better performance
நான் பலவீனமான பிரதமர் அல்ல: மன்மோகன் சிங்- Dinamani

சுடச்சுட

    
    manmohan_singh

    ""நான் பலவீனமான பிரதமர் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த கருத்து தவறு என்பதை பாஜகவுக்கு நிரூபித்து இருக்கிறேன்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

    தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    என்னை பலவீனமான பிரதமர் என்றும், ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜக தெரிவித்து வருகிறது. அந்த கருத்து தவறு என்பதை நான் நிரூபித்திருக்கிறேன்.

    வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஊழல் நடைபெறுவதை முழுவதும் தடுத்து விட முடியாது. இருப்பினும் எனது ஆட்சிக்காலத்தில் ஊழலை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

    விலைவாசி உயர்வு உண்மை: நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்திருப்பது உண்மைதான். இதற்கு சர்வதேச அளவில் பொருள்களின் விலை அதிகரித்ததுதான் காரணம். இருப்பினும் விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, பொது விநியோக திட்டத்தின்கீழ் அவர்களுக்கு உணவு பொருள்களை மத்திய அரசு சீரான முறையில் வழங்கியது.

    விவசாயத் துறையை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், விவசாய பொருள்களுக்கான குறைந்த ஆதாய விலை பலமுறை அதிகரிக்கப்பட்டது.

    முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, இந்த ஆட்சியில் விவசாயத்துறை, தொழில்துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai