Enable Javscript for better performance
மிதமிஞ்சி செயல்படுகிறார் ஜஸ்வந்த் சிங்- Dinamani

சுடச்சுட

    
    jaswanth_singh

    பார்மர் தொகுதி வழங்கப்படாததற்காக பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் மிதமிஞ்சி செயல்படுவதாகவும், அவருக்கு பரந்த மனப்பான்மை வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகள் வகித்த ஜஸ்வந்த் சிங், பரந்த மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும். பார்மர் தொகுதியில் உள்ள வெற்றி வாய்ப்புகளை கருத்தில் கொண்டதால், கட்சி அவருக்கு அந்தத் தொகுதியை வழங்க இயலவில்லை.

    ஜஸ்வந்த் சிங் ஒரு மூத்த தலைவர். கண்டிப்பாக அவர் இந்தச் சூழ்நிலையை புரிந்துகொள்ள வேண்டும். பாஜக இதுவரையில் 9 முறை அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. அதை கருத்தில் கொண்டு இந்த முறை அவர் காத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை. கட்சியை நல்ல முறையில் வழிநடத்துவதற்கான பொறுப்பு மூத்த தலைவர்களுக்கு உள்ளது.

    ஒருவரது லட்சியங்கள் எதுவாக இருந்தாலும் அது கட்சியின் விசுவாசத்துக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும். மக்கள் புத்திசாலிகள். எனவே கட்சி சரியாகச் செயல்படுகிறதா? இல்லையா? என்பது அவர்களுக்குத் தெரியும் என்று அருண் ஜேட்லி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai