Enable Javscript for better performance
\\\"முசாபர் நகர் கலவரத்தில் ஈடுபட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "முசாபர் நகர் கலவரத்தில் ஈடுபட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும்'

    By dn  |   Published on : 27th March 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முசாபர்நகர் கலவரத்தில் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்துக்கு, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், காதிர் ராணா போட்டியிடுகிறார். இதேபோல், கைரானா தொகுதியில் பாஜக சார்பில் ஹுக்கும் சிங், பிஜ்னோர் தொகுதியில் பர்தேந்த் சிங் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் முசாபர் நகர் கலவரத்தில் தொடர்புடையவர்கள். இவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அந்தப் பகுதிகளில் அமைதி சீர்குலையும். பகை உணர்வைத் தூண்டும் வகையிலான அவர்களது செயல்கள் மீண்டும் கலவரம் ஏற்பட வழிவகுக்கும் என்று கே.சி.தியாகி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai