Enable Javscript for better performance
லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியில் எவர்சில்வர் தட்டுகள் பதிக்க முடிவு - Dinamani

சுடச்சுட

    

    லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியில் எவர்சில்வர் தட்டுகள் பதிக்க முடிவு

    By dn  |   Published on : 27th March 2014 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமலையில், லட்டு தயாரிக்கும் மடப்பள்ளியில் எவர்சில்வர் தட்டுக்களை பதிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் தினமும், 2 முதல் 3 லட்சம் லட்டுக்கள் தயார் செய்யப்படுகிறது. பூந்தியை கோயிலுக்கு வெளியில் தயாரித்து கோயிலுக்குள் கொண்டு சென்று லட்டு செய்யப்படுகிறது. இதற்கு கருங்கல் மேடையின் மேல் பூந்தியில், சர்க்கரை பாகு கலந்து லட்டு பிடிக்கும் போது நெய், பாகு கற்களின் இடையில் புகுந்து விடுகிறது. இதன் மேலேயே, மீண்டும் மீண்டும் பூந்தியை தேய்த்து லட்டு பிடிப்பதால், லட்டின் தரம் குறைவது மட்டுமல்லாமல் தூய்மையும் பாதிக்கப்படுகிறது. அதனால், எவர்சில்வர் தட்டுக்களை பதிப்பதால் மணம், சுவை, குணம் மாறாமல் லட்டின் தரம் மேம்படும் என தேவஸ்தான அதிகாரிகள் கருதுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai