Enable Javscript for better performance
வாராணசியில் மோடியின் சவாலை எதிர்கொள்வோம்- Dinamani

சுடச்சுட

    
    sonia_gandhi

    வாராணசி தொகுதியில் நரேந்திர மோடியின் சவாலை காங்கிரஸ் கட்சி நிச்சயம் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    தில்லியில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் சோனியா காந்தி பேசியதாவது:

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். இதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பிரதமர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது குறித்து தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவு செய்வார்கள்.

    வாராணசி தொகுதியில் மோடியின் சவாலை காங்கிரஸ் கட்சி நிச்சயம் எதிர்கொள்ளும். அந்த தொகுதியில் மோடியை எதிர்த்து வேட்பாளரை உறுதியாக நிறுத்துவோம். அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யாரென்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபோல் வரும் தேர்தலிலும் மத்தியில் வெற்றி பெற்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்ததும், பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

    2014ஆம் ஆண்டு தேர்தல் என்பது, வளர்ச்சி, கொள்கைகள், திட்டமிடுதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடிப்படையிலானது மட்டும் அல்ல; நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான தேர்தலும் ஆகும்.

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதில் தவறேதும் இல்லை. தேர்தலில் அவருக்கு வாய்ப்பளிப்பது என்று கட்சியின் மத்திய தேர்வு கமிட்டியே முடிவு எடுத்தது. தேர்தலில் அவர் போட்டியிட சட்டமோ அல்லது தேர்தல் ஆணையமோ தடை விதிக்கவில்லை என்று சோனியா காந்தி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai