Enable Javscript for better performance
தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்: முதல்வருடன் விரைவில் ஆலோசனை: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்: முதல்வருடன் விரைவில் ஆலோசனை: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

    By dn  |   Published on : 28th May 2014 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pon_radhakrishnan

    தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும் நலிவடைந்த தொழிற்சாலைகளை மேம்படுத்தவும் முதல்வர் ஜெயலலிதாவுடன் விரைவில் ஆலோசனை நடத்துவேன் என்று மத்திய கனரக தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    மத்திய இணை அமைச்சராக அவர் புதன்கிழமை பொறுப்பேற்கவுள்ளார். இதையொட்டி அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

    "மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதும் கனரக தொழிற்சாலைகள் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவேன்.

    குறிப்பாக, தமிழ்நாட்டில் "பெல்' நிறுவனத்தில் தொழிலாளர் பிரச்னை உள்ளது. அந்நிறுவனத்துடன் தொடர்புடைய ஏராளமான தொழிற்சாலைகள் நலிவடைந்து மூடப்படும் நிலையில் இருப்பதாக அறிகிறேன். எனவே, அவற்றை மேம்படுத்தவும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

    தமிழ்நாட்டில் மாநில நலன் சார்ந்த திட்டங்களை முதல்வர் ஜெயலிலதா சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதேபோல, தேசிய நலன் சார்ந்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடி சில திட்டங்களைத் தீட்டியுள்ளார். அவற்றைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் அதன் பலன் மக்களுக்குச் சென்றடையும். இதைக் கவனத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன்.

    புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும் நலிவடைந்த தொழிற்சாலைகளை மேம்படுத்துவது குறித்தும் அவருடன் ஆலோசனை நடத்துவேன்' என்றார் ராதாகிருஷ்ணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai