பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவம்: தீவிரவாதி பயன்படுத்திய மேலும் 2 வீடுகள்

மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி பயன்படுத்திய மேலும் 2 வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கக்ராகரில் குண்டுவெடிப்பு நடைபெற்ற வீட்டின் அருகிலேயே அந்த 2 வீடுகளும் உள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி பயன்படுத்திய மேலும் 2 வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கக்ராகரில் குண்டுவெடிப்பு நடைபெற்ற வீட்டின் அருகிலேயே அந்த 2 வீடுகளும் உள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மிர்சா தெரிவித்ததாவது:

பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரவாதி கௌஸரை குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியான 2 தீவிரவாதிகள், காயமடைந்த ஒரு தீவிரவாதி ஆகியோர் பயன்படுத்திய 2 வீடுகள், பாபூர்பர்க், பாத்சாஹி ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த கக்ராகர் வீட்டில் இருந்து சிறிது தொலைவிலேயே அந்த 2 வீடுகளும் உள்ளன. அந்த வீட்டை கண்டுபிடித்து போலீஸார் சென்றபோது, அங்கு யாருமில்லை. வீட்டின் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தன. ஆனால், வீட்டினுள்ளே மின்விசிறிகள், விளக்குகள் இயங்கிக் கொண்டிருந்தன. ஆகையால், அங்கு வசித்தவர்கள் அவசர கதியில் வெளியேறியது தெரிய வந்தது என்றார் மிர்சா.

பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் 2 தீவிரவாதிகள் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி கௌஸர் என்பவரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய அரசிடம் அறிக்கை: இதனிடையே, பர்த்வான் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை மத்திய அரசுக்கு மேற்கு வங்க மாநில அரசு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைத்துள்ளது. மேற்கு வங்க டிஜிபி ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது இந்தத் தகவலை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com