சுடச்சுட

  

  டீசல் விலையும் விரைவில் குறையும்: மத்திய அரசு சூசகம்

  By dn  |   Published on : 01st September 2014 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  petrol

  பெட்ரோல் விலையைப் போன்று, டீசல் விலையும் விரைவில் குறையும் என்று மத்திய அரசு சூசகமாகத் தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக சண்டீகர் அருகே, பால்வால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

  மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் கடினமாகப் பணியாற்றி வருகிறோம். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பெட்ரோல் விலை உயர்வை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், அதன் விலையை ரூ.2.50 வரைக்கும் குறைத்துள்ளோம். அதைத் தொடர்ந்து டீசலின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

  மத்தியில் ஆட்சி நடத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். ஓர் அரசை மதிப்பிடுவதற்கு 3 மாத காலம் போதாது. மத்தியில் பதவியேற்ற முதல் நாளில் இருந்து, மக்களின் கனவுகள், குறிக்கோள்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது.

  ஜன்தன் திட்டத்தின் மூலம், வங்கிகளில் புதிதாக 1.5 கோடி

  சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் வங்கிக் கணக்கு இல்லாத எந்தவொரு குடும்பத்தினரும் இல்லை என்ற நிலை இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படும் என்றார் ராஜ்நாத் சிங்.

  பெட்ரோல் விலை, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3 முறை குறைக்கப்பட்டது. அதேசமயம், டீசலின் விலை ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடி, மாதம்தோறும் 1ஆம் தேதி லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai