காஷ்மீருக்கு உதவுவீர்!
By Dinamani | Published on : 13th September 2014 05:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வெள்ளத்தின் சீற்றத்தால் காஷ்மீர் பேரழிவைச் சந்தித்துள்ளது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். குழந்தைகள், பெண்கள், ஆடவர் என ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களது எதிர்காலமே சூனியமாகிவிட்டது. நமது நினைவுக்கு தெரிந்தவரை, அந்த மாநிலம் இதுபோன்ற கடுந்துயருக்கு இதற்குமுன்பு இலக்கானதில்லை. கண்ணீர் வெள்ளத்தில் கலங்கி நிற்கிறது காஷ்மீர்!
தேசியப் பேரிடர் எனப் பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சக குடிமக்களின் துயரத்தைப் போக்க வேண்டியது இந்தியர் அனைவரின் கடமை ஆகும். இந்தப் பணியில் எளிதில் பங்கேற்கும் வகையில், "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை வழங்கி "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி'யைத் தொடங்குகிறோம். இதற்கு, "THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND" என்ற பெயரில், நிதிக்கான காசோலைகளை, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு பதிப்பு மைய அலுவலகத்தில் வழங்கலாம். ரொக்கப் பணமாக வழங்க விரும்புவோர், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஏதாவதொரு அலுவலகத்தில் வழங்கி, அதற்கான ரசீதை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் நிதியளிக்க விரும்புபவர்கள், "THE NEW INDIAN EXPRESS KASHMIR RELIEF FUND" என்ற பெயரில் இந்தியன் வங்கியில் உள்ள நடப்புக் கணக்கு எண்.6260119197-இல் நேரடியாகச் செலுத்தலாம். வங்கிக்கான SWIFT-CODE:IDIBINBBPAD. IFSC CODE:IDIB000P001.
ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.
நிதியளித்த அனைவரது பெயர்களும், நாளேட்டில் வெளியிடப்படும். இந்த நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும்.
காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது.
அதற்கு உதவ வேண்டியது நமது கடமை.