Enable Javscript for better performance
அரசியலில் தொடர்வாரா ராகுல்?: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரசியலில் தொடர்வாரா என பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

    56 நாள்கள் நீண்ட விடுப்புக்குப் பின்னர், ராகுல் காந்தி வியாழக்கிழமை நாடு திரும்பினார்.

    இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இந்திய வரலாற்றிலேயே ஒரு அரசியல் கட்சியின் முக்கிய நபர் நீண்ட நாள்களாக காணாமல் போனது இதுவே முதல் முறை. இந்தக் காரணங்களுக்காக அவரது பெயர், செய்திகளில் இடம்பெறுவது அவரது கட்சிக்கு நல்லதல்ல.

    காங்கிரஸில் தலைமைப் பதவி குறித்து நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. இதனால் ராகுல் காந்தியும், காங்கிரஸாரும் குழப்பமடைந்துள்ளனர். இனி அரசியலில் ராகுல் காந்தி தொடர்வாரா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும். மொத்தத்தில் காங்கிரஸின் நிலைமை துடுப்பில்லாத ஓடம் போன்று உள்ளது. ராகுல் காந்தியை முன்னிறுத்தலாமா அல்லது புறக்கணிக்கலாமா என்பதில் காங்கிரஸ் கட்சி குழப்பத்தில் உள்ளது என்றார் சம்பித் பத்ரா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai