Enable Javscript for better performance
ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்: மறுபரிசீலனை தேவை- Dinamani

சுடச்சுட

    

    ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை, அஸ்ஸாம் மாநில எல்லையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அருணாசலப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து அந்த மாநில உள்துறை அமைச்சர் டங்கா பியாலிங் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

    வடகிழக்கு மாநிலங்களிலேயே எந்த கிளர்ச்சியும் ஏற்படாத அமைதியான மாநிலம் அருணாசலப் பிரதேசமாகும். இந்நிலையில், ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை அருணாசலப் பிரதேசத்தின் எல்லைப்புற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இந்த சட்டத்தின் முந்தைய நிலைப்பாட்டையே மத்திய அரசு தொடர வேண்டும். திராப் மாவட்டம், கொன்ஸாவில் சமீபத்தில் பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்த உளவுத் துறை தகவல் எதையும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு என்னிடம் தெரிவிக்கவில்லை.

    அருணாசலப் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டறிந்து, விரிவான அறிக்கை அனுப்புமாறு பாதுகாப்பு நிறுவனங்களையும், அனைத்து மாவட்டங்களையும் கேட்டுள்ளோம்.

    உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai