Enable Javscript for better performance
ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் மரணம்: விசாரணையைத் தொடங்கியது சி.பிஐ.- Dinamani

சுடச்சுட

    

    ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் மரணம்: விசாரணையைத் தொடங்கியது சி.பிஐ.

    By dn  |   Published on : 17th April 2015 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மர்ம மரணம் தொடர்பான தமது முதல்கட்ட விசாரணையை மத்தியப் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வியாழக்கிழமை தொடங்கியது.

    இதுகுறித்து சி.பி.ஐ. வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கர்நாடக மாநில அரசு கேட்டு கொண்டதற்கிணங்கவும், மத்திய அரசின் உத்தரவுப்படியும், ரவியின் மரணம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, ரவியின் மரணம் தொடர்பான தமது விசாரணையை, சிபிஐ 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை, சிபிஐ நிராகரித்தது.

    பின்னர் கர்நாடக அரசின் காலக்கெடு தவிர்த்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையை உறுதி செய்து, மத்திய பணியாளர் துறை கடந்த

    திங்கள்கிழமை (ஏப்.13) அறிவிக்கை வெளியிட்டது.

    பெங்களூரில், வணிக வரித் துறையின் அமலாக்கப் பிரிவில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி, கடந்த மாதம் 16-ஆம் தேதி, தமது வீட்டில் தூக்கிலிட்டப்படி இறந்து கிடந்தார்.

    அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறியதை, ரவியின் குடும்பத்தினர் மறுத்தனர். அவரது மரணத்தில் மணல் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    கர்நாடகத்தின் கோலார் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், ரவியின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai