Enable Javscript for better performance
கர்நாடக சிறப்பு பேரவைக் கூட்டம்: புறக்கணிக்க மஜத முடிவு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக சிறப்பு பேரவைக் கூட்டம்: புறக்கணிக்க மஜத முடிவு

    By dn  |   Published on : 17th April 2015 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு மாநகராட்சியைப் பிரிப்பது தொடர்பாக, வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அந்தக் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா வியாழக்கிழமை கூறியதாவது:

    பெங்களூரு மாநகராட்சியை 3-ஆக பிரிப்பதற்காக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அரசு விடுத்துள்ள அழைப்பைப் புறக்கணிக்குமாறு கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் குமாரசாமி, சட்ட மேலவை குழு தலைவர் பசவராஜ் ஹோரட்டிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிறப்பு பேரவைக் கூட்டத்தில் மஜத கலந்து கொள்வதால், எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சட்டப்பேரவையில் தர்னா நடத்துவதால் மாநகராட்சியைப் பிரிக்கும் முடிவை காங்கிரஸ் கைவிடப் போவதுமில்லை.

    பேரவையில் காங்கிரஸýக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், மாநகராட்சியைப் பிரிக்கும் சட்டத் திருத்தம் எளிதில் நிறைவேற்றப்படும்.

    பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை மே 30-ஆம் தேதிக்குள் நடத்துமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சித்தராமையா நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    பெங்களூரு மாநகராட்சியைப் பிரிக்க அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் வஜுபாய் வாலா அனுமதி அளிக்காத நிலையில், மாநகராட்சியைப் பிரிக்க சித்தராமையா பிடிவாதமாக இருப்பது சரியல்ல. மாநகராட்சியைப் பிரிக்கக் கூடாது என்று மாமன்றக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai