Enable Javscript for better performance
கிராம மக்கள் துன்புறுத்தல்: விசாரணைக்கு பிகார் அரசு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கிராம மக்கள் துன்புறுத்தல்: விசாரணைக்கு பிகார் அரசு உத்தரவு

    By dn  |   Published on : 17th April 2015 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின் கட்டண வசூல் என்ற பெயரில் மின்துறை அதிகாரிகளும், போலீஸாரும், பிகாரின் நெபுரா கிராம மக்களைத் துன்புறுத்தியது தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று அந்த மாநில அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

    இப்பிரச்னை தொடர்பாக, பிகார் சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் பிரேம் குமார் பேசுகையில், "பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சொந்த ஊரான நாலந்தாவுக்கு உள்பட்ட நெபுரா கிராமத்தில் பொது மக்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறினார்.

    இதுகுறித்து, ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நீரஜ் குமார் கூறியதாவது:

    மின் கட்டணத்தை ஒழுங்காக செலுத்தியுள்ளபோதிலும், போலீஸாரால் அந்த கிராம மக்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

    அந்த கிராமத்துப் பெண்களிடம், போலீஸார் தவறாக நடந்துகொண்டுள்ளனர்.

    இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும். குற்றம் புரிந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீரஜ் குமார் வலியுறுத்தினார்.

    அதையடுத்துப் பேசிய உள்துறை அமைச்சர் விஜய் செளத்ரி "நெபுரா கிராம மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து மூத்த அரசு அதிகாரியைக் கொண்டு விசாரணை நடைபெறும். தவறிழைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai