Enable Javscript for better performance
குண்டு வீசித் தாக்குதல்: மார்க்சிஸ்ட் தொண்டர் பலி- Dinamani

சுடச்சுட

    

    கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் மர்ம நபர்கள் குண்டு வீசியதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

    வினோத் (36) என்ற அந்த கட்சித் தொண்டர் மலையாள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, பானூர் பகுதி அருகே மர்ம நபர்கள் சிலர் அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். அதில் அவர் உயிரிழந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணனூர் மாவட்ட செயலாளர் பி.ஜெயராஜன் "விழா நேரத்தில் அரசியல்ரீதியாக பதற்றம் நிறைந்த பகுதிகளில் போதுமான எண்ணிக்கையில் போலீஸார் பாதுகாப்புக்கு இல்லாததே இச்சம்பவம் நிகழ காரணம்' என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai