Enable Javscript for better performance
குற்றப் பத்திரிகையில் சாட்சியாக ஸ்மிருதி இரானி பெயர் சேர்க்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    குற்றப் பத்திரிகையில் சாட்சியாக ஸ்மிருதி இரானி பெயர் சேர்க்கப்படுமா?

    By dn  |   Published on : 17th April 2015 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    smithra_rani

    கோவா மாநிலத்தில் உள்ள "ஃபேப் இந்தியா' துணிக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்தது தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பெயர் சாட்சியாகச் சேர்க்கப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனிப்பட்ட முறைப் பயணமாக கடந்த 3ஆம் தேதி கோவா சென்றார். அங்குள்ள "ஃபேப் இந்தியா' துணிக்கடைக்கும் அவர் சென்றிருந்தார்.

    அப்போது, அங்குள்ள உடை மாற்றும் அறையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து, காவல்துறையில் புகார் அளித்தார்.

    ஸ்மிருதி இரானியின் புகாரைத் தொடர்ந்து, அந்தத் துணிக்கடையின் ஊழியர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பாக, காவல் துறையின் உயரதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:

    ஸ்மிருதி இரானியின் வாக்குமூலத்தை ஏற்கெனவே பதிவு செய்துவிட்டோம். ஒருவரது பெயரை சாட்சியாகக் குற்றப்பத்திரிக்கையில் சேர்ப்பதா, வேண்டாமா என்பதை விசாரணை அதிகாரிதான் முடிவு செய்வார்.

    ஸ்மிருதி இரானியை வழக்கின் சாட்சியாகச் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

    இந்த வழக்கைத் தொடர்ந்த பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ, மற்றொரு பாஜக எம்எல்ஏ டாக்டர் பிரகாஷ் சாவந்த், முதல்வரின் சார்புச் செயலாளர் சதானந்த் தனாவாடே ஆகிய சாட்சிகள் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டோம். "ஃபேப் இந்தியா' நிறுவன அதிகாரிகளும் இதில்

    அடக்கம்.

    அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகளின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்ப்பது குறித்து சட்ட நிபுணர்களை ஆலோசித்து வருகிறோம். அவர்களுக்கு இந்த வழக்கில் நேரடித் தொடர்பு இல்லாத போதிலும், இது போன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்க அவர்கள் தவறிவிட்டனர்.

    உடை மாற்றும் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தகவல்களை ஆய்வுக்காக ஹைதராபாதுக்கு அனுப்பியுள்ளோம் என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai