Enable Javscript for better performance
சிறையில் மோதல்: 2 கைதிகள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாப் மாநிலம், பதிண்டா சிறையில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் 2 கைதிகள் பலத்த காயமடைந்தனர்.

    இதுகுறித்து சிறைத் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

    பதிண்டா சிறையில் வியாழக்கிழமை காலை 6.30 மணி அளவில், தங்கள் அறைகளில் இருந்து கைதிகள் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது, கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட திடீர் சண்டையின்போது, நரெளனா என்ற கைதி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், குர்தீப் சிங் கோபி என்ற கைதியின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

    விசாரணையில், இந்த நாட்டுத் துப்பாக்கியையும், செல்லிடப்பேசிகளையும் சிறை அதிகாரிகள்தான் நரெளனாவுக்கு விநியோகித்ததாக கோபி குற்றம்சாட்டினார். அதை சிறை அதிகாரிகள் மறுத்தனர்.

    மேலும், ஒரு கைதியும் வன்முறையில் காயமடைந்தார்.

    குடியிருப்புப் பகுதியில் இந்த சிறை அமைந்துள்ளதால் வெளியில் இருந்து துப்பாக்கியை வேறு யாராவது வீசியிருக்கவும் வாய்ப்புள்ளது என்று சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai