Enable Javscript for better performance
சீனத் தொழிலதிபர்களுக்கு உதவ தனிப் பிரிவு: ஆந்திர முதல்வர்- Dinamani

சுடச்சுட

    

    சீனத் தொழிலதிபர்களுக்கு உதவ தனிப் பிரிவு: ஆந்திர முதல்வர்

    By dn  |   Published on : 17th April 2015 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chandrababu_naidu

    ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்பும் சீனத் தொழிலதிபர்களுக்காக, தனிப் பிரிவு தொடங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    இதுகுறித்து ஆந்திர முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

    முதல்வர் சந்திரபாபு நாயுடு சீன நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அதில், ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய விரும்பும் சீன தொழிலதிபர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.

    தொழில் அமைதி, திறன் மேம்பாடு, சிறந்த தொழிலாளர் கொள்கை ஆகியவற்றுக்கான இடமாகவும் ஆந்திரப் பிரதேசம் திகழும் என்று அவர் தெரிவித்தார்.

    மாநிலத்தின் புதிய தலைநகரமான அமராவதியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக உருவாக்கும் பணிகளில் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுடன் சீனாவும் இணைந்து செயல்பட நாயுடு விருப்பம் தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில் சீனாவுக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தாவும் பங்கேற்றார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் ஆந்திரப் பிரதேச அரசின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai